த்ரிஷாதான் என் ரோல் மாடல்!- ஸ்ருதி சண்முகப்பிரியா


பகத்பாரதி
readers@kamadenu.in

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’, சன் டிவியின் ‘வாணி ராணி’ தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ருதி சண்முகப்பிரியா, தற்போது சென்டிமென்ட் சீரியலாக உருகவைத்துக்கொண்டிருக்கும் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார். நடிப்பைப் போல் படிப்பிலும் ஆர்வம் காட்டும் ஸ்ருதி, பிரெஞ்சு படிப்பையும் தொடர்ந்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?

கிட்டத்தட்ட ஒன்பது வருஷமா சன் டிவியில் நடிச்சிட்டு இருந்தேன். விஜய் டிவியிலிருந்து வாய்ப்பு வந்ததும் ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. விஜய் டிவியில் நான் நடிச்ச முதல் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் என்னுடைய கேரக்டருக்கு ரொம்பப் பெரிய ரோல் இல்லை. கொஞ்ச நாளா எனக்கு அந்த சீரியலில் அதிகக் காட்சிகளும் இல்லை. அதனால அந்த சீரியலுடைய இயக்குநர் பிரவீன் சார் தான் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு' சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

x