சினிமா பிட்ஸ்


ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தில் மாளவிகா மோகனன் தான் கதாநாயகியாக நடிப்பார் என்று முதலில் பேசப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிட்டாராம் ராஷ்மிகா மந்தனா.
 அதுக்கென்ன, ‘அருவா 2'ல  நடிச்சிட்டாப் போச்சு..! 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை நா.முத்துக்குமாரின் கவிதையின் தாக்கத்தில் உருவானது என முதலில் சொல்லப்பட்டது. உண்மையில், மீரான் மைதினின் ‘அஜ்னபி’ நாவலைத் தழுவித்தான் இப்படம் எடுக்கப்படுகிறதாம்.
‘வாடிவாசல்' நாவல் எப்ப படமாகுது சார்?

விஜய்யின் அடுத்த படத்தைச் சுதா கொங்கரா இயக்குவார் என்ற தகவல் பொய்யாகிவிட்டது. திடீரென முருகதாஸுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார் தளபதி. விஜய்யை இயக்கும் திட்டம் சொதப்பியதால், சிம்புவுக்கு கதை சொல்லியிருக்கிறாராம் சுதா கொங்கரா.
 சிம்பு படம் வெளிவரக்கூடாதுன்னு  உலகமே சதி பண்ணுமாமே... சமாளிப்பாரா?  

ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் குஷ்புவும் நடிக்கிறார்களாம். தெலுங்கு முன்னணி நடிகர் கோபி சந்தும் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார் என்கிறார்கள்.
அரசியல் களத்திலும் அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஸ்டாருக்கு எதிரிதானே..!

x