‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ - திரை விமர்சனம்


ஜெகஜால கொள்ளைக்கார ஜோடி போலீஸிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி தங்கள் இலக்கை அடையும் கதைதான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

இணையம் வழியாகவும் மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் மூலமாகவும் நிகழ்த்தப்படும் மோசடிக் குற்றங்களின் பின்னணியில் ஒரு த்ரில்லரைக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. புதுப் புது ஐடியாக்கள், ஊகிக்க முடியாத திருப்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு சுவாரசியம் நிறைந்த படத்தைப் பார்த்த திருப்தியைத் தந்துவிடுகிறார்.

முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகம், காதல், நட்பு ஆகியவற்றைச் சொல்லும் காட்சிகள் கொஞ்சம் பொறுமையைச் சோதித்தாலும் நாயகனும் அவனது நண்பனும் மோசடி செய்பவர்கள் என்று தெரிந்தவுடன் படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.

இரண்டாம் பாதி ஒரு கட்டத்துக்கு மேல் லாஜிக் ஓட்டைகள் பல்லிளிக்கத் தொடங்கிவிடுகின்றன. மோசடி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மிகவும் சொத்தையானவர்களாக இருப்பதால் நாயகன் நினைதெல்லாம் மிக எளிதாக நடந்து முடிந்துவிடுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. இந்த ஓட்டையை மறைக்க தொழில்நுட்ப விவகாரங்கள் சார்ந்த ஐடியாக்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தாலும் அவற்றைப் பின்பற்றி நினைவில் வைத்துக்கொள்வதும் கடினமாகிவிடுகிறது.

x