யுவன் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன்!- இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் 


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

அவரது அறையின் இரண்டு பக்கச் சுவரிலும் கமலின் ‘குணா’ படத்தின் பெரிய சுவரொட்டிகள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. “கமல் சார் படங்களிலேயே எனக்கு ‘குணா’தான் ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் இந்த செட்-அப்” என்று கலகலப்பாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ படங்களைத் தொடர்ந்து, ‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்துடன் வருகிறார். அவருடன் ஒரு பேட்டி:

அப்படி என்ன பிளான் பண்ணியிருக்கீங்க?

‘பம்மல் கே. சம்பந்தம்’ படத்துல கமல் சார் சொல்வார், “ஜோக் சொன்னா அனுபவிக்கணும் ஆராயக் கூடாது”ன்னு. அதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். நாம எல்லாரும் பிளான் பண்ணுவோம். எல்லாருக்கும் ஒரு பிளான் இருக்கும். அந்த பிளான்கள் ஒண்ணோட ஒண்ணு குறுக்கிடும்போது ஏற்படும் கலாட்டாதான் இந்தப் படத்தின் ஒன்லைன். பெரும்பாலும் வாழ்க்கைக்குப் போடும் பிளான் எல்லாம் சொதப்பலில்தான் முடியும். ‘பாணா காத்தாடி’ படத்துல க்ளைமாக்ஸ் காட்சியில ஹீரோவைக் கொன்னுட்டேன்னு, பார்க்கிறவங்கள்லாம் என்னைத் திட்டினாங்க. இன்னைக்கு மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. அதுல இருந்து தப்பிக்கத்தான் அவங்க தியேட்டருக்கே வர்றாங்க. அப்படி வர்றவங்களை ஏன் இன்னும் சோகமாக்கணும்? மண்டையக் குழப்பிட்டு யோசிக்க வைக்கணும்? நல்லா சிரிக்க வைப்போமேன்னு பிளான் பண்ணிதான் இந்தப் படத்தை ஆரம்பிச்சேன். பெயருக்கு ஏற்ற மாதிரியே படத்தின் படப்பிடிப்பைக் கச்சிதமா திட்டமிட்டு நடத்தினோம். நாற்பதே நாட்கள்ல படத்தை முடிச்சிட்டோம்.
    
இந்தக் கதை உருவான கதை என்ன?

x