பகத்பாரதி
readers@kamadenu.in
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி' சீரியலில், அனன்யா எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஷ்மா நாயருக்கு ஏகப்பட்ட ரசிகர் - ரசிகைகள். குறிப்பாக, சுஷ்மா அணியும் ஆடைகளுக்காகவே அவரைக் கொண்டாடுகிறார்கள். ஆடை மூலம் அசத்தும் சுஷ்மாவின் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால், அவரே ஒரு ஆடை வடிவமைப்பாளர்தானாம். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தாலும் இனிமை குறையாமல் பேசும் சுஷ்மாவுடன் ஒரு பேட்டி:
‘நாயகி’ சீரியல்ல நடிக்கிற அனுபவம் பற்றிச் சொல்லுங்க…
இந்த சீரியல் என் வாழ்க்கையையே மாற்றிய சீரியல்னு சொல்லுவேன். இயக்குநர் குமரன் சார் ரொம்ப ஸ்வீட். ரொம்பப் பெரிய கேரக்டரை என்னை நம்பி கொடுத்திருக்கார். இந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷமாச்சு. ரசிகர்கள் அனன்யா கேரக்டரை ரொம்பவே ரசிக்கிறாங்க. முன்னாடியெல்லாம் எதிர்மறை கேரக்டர் பண்றவங்களை ரசிகர்கள் திட்டுவாங்கன்னுதானே கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, என் நடிப்பைப் பற்றியும், என் காஸ்டியூம் பற்றியும் பலரும் என்னை பாராட்டுறாங்க. துபாய் வரைக்கும் நான் ஃபேமஸ்னா பார்த்துக்கோங்களேன்.