முதல்வர் ஆகத் துடிக்கிறார் விஜயபாஸ்கர்- சீக்ரெட் உடைக்கும் சிவசங்கர்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

திமுகவின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம் எல் ஏ-வுமான எஸ்.எஸ்.சிவசங்கர், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதும் பதிவுகள் சமூக வலைதளவாசிகள் மத்தியில் பிரபலம். அண்மமையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மனின் மரணத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் காரணம் என்று அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுதொடர்பாக சிவசங்கரைச் சந்தித்துப் பேசினேன். அவரது பேட்டி:
    
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு?

விஜயபாஸ்கர் தனது பதவியைத் தக்கவைக்கவும் மத்திய அரசை சந்தோஷப்படுத்தவும் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துவருகிறார். அது நீட் தேர்வில் ஆரம்பித்து, இதோ மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மரணம் வரைக்கும் தொடர்கிறது.

போராட்டம் நடத்தினார் என்பதற்காக நூற்றுக்கணக்கான மருத்துவர்களை இடமாற்றம் செய்தார். பேச்சுவார்த்தையில் உத்தரவாதம் கொடுக்கப்பட்ட பிறகும்கூட அதை ரத்து செய்யவில்லை. சுமார் 200 முறைக்கும் மேல் சேலத்திலிருந்து சென்னை வந்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் லட்சுமி நரசிம்மன். ஆனாலும் எந்தப் பலனுமில்லை. தன்னுடன் பணியாற்றுகிறவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடமாறுதல் குறித்த சங்கடம்தான் லட்சுமி நரசிம்மனை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி மரணம் வரை கொண்டுபோய்விட்டது.  இதற்கு முழுப் பொறுப்பும் விஜயபாஸ்கர்தான். அரசின் இந்த பழிவாங்கும் போக்கின் பின்னணியில் அரசு மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்கும் சூழ்ச்சியும் இருக்கிறது.

x