மாஃபியா: அத்தியாயம் 1- திரை விமர்சனம்


போதை மருந்து தடுப்பு அதிகாரி ஒருவருக்கும் சர்வதேச போதை மருந்துக் கடத்தல் கூட்டத்தின் முக்கியப் புள்ளிக்கும் இடையிலான சிங்க-நரி வேட்டையே ‘மாஃபியா: அத்தியாயம் 1’.

தன் சகோதரன் போதைப் பழக்கத்தால் இறந்துவிட, போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாகிறார் அருண் விஜய். போதைப் பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களைக் கைது செய்து, ஒட்டுமொத்த போதை மாஃபியாவின் தலைவனைப் பிடிக்கப் பார்க்கிறார். இதை அறிந்துகொள்ளும் மாஃபியா கூட்டத்தின் தலைவனான பிரசன்னா, அருண் விஜய்யின் குடும்பத்தினரைக் கடத்துகிறார். அருண் விஜய் தனது குடும்பத்தைக் காப்பாற்றினாரா, பிரசன்னாவை கைது செய்தாரா என்பதே திரைக்கதை.

நாயகனும் வில்லனும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துக்கொள்ளாமல் நடத்தும் நிழல் யுத்தம்தான் இந்தப் படத்துக்கான திரைக்கதையின் உயிர்நாடி. இப்படிப்பட்ட திரைக்கதையில் இந்த நிழல் யுத்தம் சுவாரசியமாகவும் புதுமையான உத்திகள் நிறைந்த
தாகவும் ஆங்காங்கே ஆச்சரியங்களுடனும் நகர வேண்டும். ஆனால், படம் அப்படி நகரவில்லை.

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பிரசன்னா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அருண் விஜய் செய்யும் தந்திரங்கள் சற்று ரசிக்கும்படி இருக்கின்றன. அதிலும்  லாஜிக் பிழைகள் இருக்கின்றன.  அங்கிருந்து ஓரளவு தொய்வில்லாமல் நகரும் திரைக்கதை கடைசி 15-20 நிமிடங்களில் சில ஆச்சரியங்களைத் தருகிறது. அதுவே படத்தை அதன் மற்ற குறைகளிலிருந்து ஓரளவுக்கு காப்பாற்றுகிறது.

x