பாரம் - திரை விமர்சனம்


படுத்த படுக்கையாய் கிடக்கும் தந்தையைக் கவனித்துக் கொள்ளாமல், அவரைப் பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதைதான் ‘பாரம்’.

தனது தங்கை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பசாமி மீது, தங்கையின் குழந்தைகள் பாசமாக இருக்கிறார்கள். அனைவருமே நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும், நைட் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார் கருப்பசாமி. ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்புகையில் விபத்தில் சிக்குகிறார். அதற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.

66-வது தேசிய விருது விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்ற படம் இது. ஆனால், ஆவணப் படத்துக்கான கூறுகள்தான் அதிக அளவில் இருந்தன.

பெரும்பாலும் புதுமுக நடிகர்களாக இருப்பதால் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நேரடியாகப் பார்ப்பது போல் உணர முடிகிறது. குறிப்பாக, கருப்பசாமி, அவருடைய தங்கை, மீனா ஆகிய 3 கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக யதார்த்தம். அதேபோல் வசனங்களும், பெரும்பாலும் சூழ்நிலையைச் சொல்லி நடிகர்களையே பேச வைத்தது போல் இயல்பாக உள்ளது.

x