பகத்பாரதி
readers@kamadenu.in
கலகலப்பான ஆங்கராக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமான ஃபரீனா ஆசாத், தற்போது சின்னத்திரை நடிகையாக வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா' தொடரில் எதிர்மறை நாயகியாக நடித்து ஏராளமான தாய்மார்களின் செல்லக் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் ஃபரீனாவுடன் ஒரு பேட்டி:
ஆங்கரா இருந்துக்கிட்டே நடிக்கிறது கஷ்டமா இல்லையா?
நடிப்பு பக்கம் வந்துட்டாலும் ஆங்கரிங் பணியை இன்னமும் நான் விட்டுடலை. நான் ஆங்கர்னு எல்லோருக்கும் தெரியுங்கிறதால ஆங்கரிங் பண்றதுக்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்க. ஷூட்டிங் இருக்கிற அன்னைக்கு ஏதாவது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டியிருந்தால் இயக்குநர்கிட்ட சொல்லுவேன். இயக்குநர் சீக்கிரமா என்னுடைய காட்சிகளை எடுத்துட்டு என்னை அனுப்பி வச்சிடுவார். அதனால ஆங்கரிங்கை இப்போ வரைக்கும் மிஸ் பண்ணலை.