விக்கி
readers@kamadenu.in
உலக சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் காத்திருக்கும் திரைத் துறை கொண்டாட்டமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.
வழக்கமாக, வெற்றி பெறும் படங்கள், கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னணி குறித்து ஒவ்வொரு முறையும் சர்ச்சைகள் எழும்; அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படும். ஆனால், நடந்து முடிந்துள்ள 92-வது ஆஸ்கர் விழா, இவை எல்லாவற்றையும் கடந்து வேறு வகையில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிரம்மாண்டம் எனும் மாயக் கோட்டையைத் தன்னைச் சுற்றி கட்டமைத்திருக்கும் ஹாலிவுட் மண்ணில், மனிதம் போற்றும் யதார்த்த சினிமாவுக்கும் இடம் இருக்கிறது எனும் நம்பிக்கை ஒளிக்கீற்று சுடர்விட ஆரம்பித்துள்ளது என்பதற்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவே சாட்சி.