தறிகெட்டு நிற்கும் தர்பார் தகராறு-  ரஜினியின் மவுனமும் விநியோகஸ்தர்களின் வேதனையும்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

அரசியலுக்கு வரும் முடிவை அறிவித்ததிலிருந்தே ரஜினிக்குப் பல்வேறு அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை திரைத் துறைக்கு வெளியிலிருந்தே சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது திரைத் துறைக்கு உள்ளிருந்தே ரஜினிக்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆம், ‘தர்பார்’ படத்தின் விநியோகஸ்தர்கள் ரூபத்தில் கிளம்பியிருக்கிறது புதிய பிரச்சினை.

தமிழ்நாட்டில் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு உரிமைகளை வாங்கிய விநியோகஸ்தர்கள், அந்தப் படத்தால் 25 கோடி ரூபாய்க்கு நஷ்டம் அடைந்துவிட்டதாகக் குமுறுகிறார்கள். இதற்கான நஷ்டஈட்டை ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஜினியைச் சந்திக்கச் சென்ற விநியோகஸ்தர்களைப் போயஸ் கார்டனுக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்து அனுப்பியுள்ளனர். போதாதகுறைக்கு ஏ.ஆர்.முருகதாஸும் போலீஸை விநியோகஸ்தர்கள் மீது ஏவியுள்ளார். இதில் கடுப்பாகிப்போன விநியோகஸ்தர்கள் முருகதாஸை (மட்டும்) கண்டித்து, சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

‘மொக்கைப் படம்!’

x