விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படத்தில் சமந்தாவும் இணைய வாய்ப்புள்ளதாம். இந்தப் படத்துக்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்று பெயரிடப்படலாம் எனப் படக்குழுவிலிருந்து தகவல் கசிகிறது.
காதலே காதலே தனிப்பெருந்துணையே...
விஜய் வீட்டில் வருமானவரி சோதனைகள் நடந்தபோதும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாம். விஜய் இல்லாத காட்சிகளை விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோரை வைத்து படமாக்கினாராம் லோகேஷ் கனகராஜ்.
படம் முக்கியம் பிகிலு...
அநியாயத்துக்கு எடையைக் குறைத்து அதிர்ச்சியளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்காகத் தான் இந்த கெட்-அப். இதைப் பார்த்துவிட்டு, எங்களுக்குப் பழைய கீர்த்திதான் வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுக்கும் ஹேஷ்டேக் ஆரம்பிச்சிருப்பாங்களே...
புதுமாப்பிள்ளை யோகிபாபு திடீர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ‘காக்டெய்ல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முருகன் வேடத்தில் அவர் இருப்பதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட, முருகன் படத்துக்கு ‘காக்டெய்ல்’ என மதுபானத்தின் பெயர் வைப்பதா என்று இந்து அமைப்புகள் கிளர்ந்தெழுந்துவிட்டன. படத்தில் நடித்திருக்கும் பறவை காக்டெய்ல் இனத்தைச் சேர்ந்தது. அதைச் சுற்றி கதை நகர்வதால்தான், அந்தப் பெயர் என்று படக்குழு விளக்கம் தெரிவித்திருக்கிறது.
இது, எச்.ராஜாவை பிஆர்ஓ வேலை பாக்க வெக்கிற முயற்சிங்கிறேன்...