க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
நாகேஷுக்குப் பெயர் வாங்கித்தந்த ‘சர்வர் சுந்தரம்’ பட டைட்டிலில் உருவாகும் படத்தில் அறிமுகமாகிறார் அவரது பேரன் பிஜேஷ் நாகேஷ். ஆனந்த் பாபுவின் மகனான பிஜேஷ் இந்தப் படத்தில் சந்தானத்தின் நண்பராக நடிக்கிறார். அவரைச் சந்திக்க சென்னை போரூரில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது, ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்பின் பெரிய படம் வரவேற்கிறது. “தாத்தா படம் வைக்கலையா?” என்று கேட்டால், “அவர்தான் என் மனசுலேயே இருக்காரே” என்று சென்டிமென்டாக ஆரம்பிக்கிறார். பேச்சு, நடை, பாவனை அனைத்திலும் நாகேஷ் வந்துபோகிறார்.
நடிக்கும் முதல் படத்தின் பெயரே ‘சர்வர் சுந்தரம்’. எப்படி அமைஞ்சது இது?
படத்துக்கு இந்தப் பெயர் இருந்ததால்தான் நடிக்கவே சம்மதிச்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு எழுத்தாளர் ஆகணும், பத்திரிக்கைகள்ல எழுதணும்னுதான் ஆசை. மேனேஜ்மென்ட் படிப்பைப் பாதியில விட்டுட்டு ஆங்கில நாவல்கள் எழுத ஆரம்பிச்சுட்டேன். பல இணையதளங்களுக்குக் கன்டென்ட் எழுதிக் கொடுக்கும் வேலையும் பார்த்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல வெளிநாட்டுக்குப் போய் அங்கே எழுத்தாளர் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்தச் சமயத்துலதான் இயக்குநர் ஆனந்த் பால்கி சார் என் அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ என்னைப் பார்த்துட்டு நடிக்க வர்றியான்னு கேட்டார். எனக்குத் தயக்கமாதான் இருந்துச்சு. அவர் டைட்டிலைச் சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன். “நீ கண்டிப்பா நடிப்படா… அது எப்போன்னு உனக்கே புரிய வரும்”னு ஒரு முறை தாத்தா என்கிட்ட சொன்னார். படத்தோட டைட்டில் ‘சர்வர் சுந்தரம்’னு தெரிஞ்சதும் நான் நடிக்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் இதுதான்னு புரிஞ்சது. தாத்தாவோட ஆசிர்வாதம் எனக்கு இருக்கும்னு நம்புறேன்.
சந்தானத்துடன் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?