சிசிடிவி கேமராவில் ஒரு சினிமா!- நாகர்கோவில் இளைஞரின் சாதனை


என்.பாரதி
readers@kamadenu.in

திரைப்படத் தயாரிப்பு என்றாலே கோடிக்கணக்கில் செலவாகும் என்றே நாம் அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால், ரூ.45,000 பட்ஜெட்டில் ஒரு படமெடுத்துத் திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ரத்தினக்குமார். சென்னையில் வசித்துவரும் இவர், இந்தப் படத்தை சிசிடிவி கேமராவை வைத்தே எடுத்து முடித்திருப்பது இன்னும் சிறப்பு.

இவர் இயக்கியிருக்கும் ‘சர்வைலன்ஸ் ஜோன்’ எனும் இந்தப் படம், சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்துவருகிறது. பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்குப் பிறகு ‘இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்’ஸில் இடம்பெற்றிருக்கும் தமிழ்ப் படம் இது. ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய இந்தப் படத்தில் இசையே கிடையாது. வசனங்களும் சொற்பம்தான்.

சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வந்திருந்தவரை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன். “என்னோட அப்பா தமிழாசிரி
யரா இருந்தவர். அம்மா இல்லத்தரசி. சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா ஆர்வம் இருந்துச்சு. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டு சென்னையில பெரிய நிறுவனத்துல வேலை பார்த்தேன்.

x