சினிமா பிட்ஸ்


“நல்ல வெப் சீரீஸ் கதை இருந்தால் நடிக்கத் தயார்” என்று அறிவித்திருக்கிறார் ஸ்ரேயா. திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்து வருவதால் தான் அம்மணி இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று கூறுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
குஷ்பு, ராதிகா மாதிரி சின்னத்திரையை ஆளுங்க...

தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்கிறார் தமன்னா. தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தில் கபடி கோச் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் தமன்னா. இதற்காக பிரத்தியேக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் தமன்னா.
கொஞ்சம் எடையக் கூட்டுங்க மேடம்...

கடந்த வாரம் முழுக்க ‘மேன் வெர்ஸஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டதுதான் பேசு பொருளானது. ரஜினியைத் தொடர்ந்து நடிகர் அக் ஷய் குமாரும் சத்தமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கும் நடிகர்கள் மட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
யாவாரத்தைக் கெடுக்காதீங்கய்யா...

சமீப காலமாக விஜய்க்கு மாஸ் என்ட்ரி பாடல்கள் எழுதி வந்த பாடலாசிரியர் விவேக் ‘மாஸ்டர்’ படத்தில் மிஸ்ஸிங்காம்.  ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ஒரு பாடலையும், அருண்குமார் காமராஜ் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்களாம்.
தளபதி ரசிகர்கள் என்ன சொல்றாங்க?

x