சைக்கோ- திரை விமர்சனம்


தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதைதான் ‘சைக்கோ’.

பார்வையில்லாத மாற்றுத்திறனாளியாக நடிக்க வேண்டும் என்பதற்கான மெனக்கிடல் உதயநிதியின் நடிப்பில் தெரிகிறது. காதலுக்காக ஏங்குவது, காதலியைக் கண்டு பிடிக்கப் போராடுவது எனக் கதாபாத்திரத்துடன் பொருந்தியிருக்கிறார்.

நாயகியாக அதிதி ராவ். தன் பின்னாலேயே அலையும் உதயநிதியைத் திட்டுவது, பின்பு அவரின் காதலை ஏற்பது என்பதைத் தாண்டி, சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். அதிலும், தன் முன்னால் சைக்கோ ஒரு கொலை செய்யும்போது அவருடைய அழுகையும், பயமும், தவிப்பும் பார்வையாளர்களைக் கதாபாத்திரத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒரு விபத்தின் விளைவாக கழுத்துக்குக் கீழே உணர்ச்சிஇல்லாத நிலையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நித்யா மேனன். எல்லோரையும் திட்டிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் கவர்கிறார்.

x