சினிமா பிட்ஸ்


சமீபத்தில் தமிழில் தான் நடித்த அத்தனை படங்களும் வரிசையாகச் சொதப்பியதால் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கேத்தரின் தெரசா. விஜய் தேவரகொண்டாவுடன், ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் நடித்த கையோடு தன் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டாராம்.
அப்படின்னா... அங்கேயே செட்டிலாகிடுங்க அம்மணி!

சமீபகாலமாக விஷ்ணு விஷாலும் பூப்பந்தாட்ட வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நண்பர்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி கோடம்பாக்க வட்டாரத்தில் பரவியது. “ஜுவாலா கட்டா சொல்லித்தான் உடல் எடையைக் குறைத்தீர்களா?” என்று ரசிகர் ஒருவர், விஷ்ணு விஷாலிடம் கேட்க, அதற்கு விஷ்ணு விஷால் பதிலளிக்கும் முன்பே ஜுவாலா கட்டா, “இல்லை. அவராகவேதான் அப்படிச் செய்தார்” என்று விளக்கமளித்திருக்கிறார்.
இங்க சுவிட்ச் போட்டா 
அங்க பல்ப் எரியுது... அப்ப அதானே?

ராஷ்மிகா மந்தானா வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தைக் கட்டுக்கட்டாக அள்ளிக்கொண்டுபோனார்கள். தன் தந்தை மற்றும் ஆடிட்டருடன் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்த ராஷ்மிகா, மொத்தம் ரூ.250 கோடிக்குக் கணக்கு காட்டினாராம். நடிக்க வந்து நான்கு வருடத்தில் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என்று விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறதாம் வருமான வரித் துறை.
எப்படிப் பார்த்தாலும் கணக்கு உதைக்குதே?

‘ஸ்லம்டாக் மில்லினியர்‘ படத்தில் நாயகனாக நடித்த தேவ் பட்டேல், இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் திறமை காட்டிவரும் தேவ், ‘மங்கி மேன்’ என்ற ஃபேன்டசி ஹாலிவுட் படத்தை இயக்கவிருக்கிறார்.
ரெடி... ஸ்டார்ட்... ஆக்‌ஷன்... கலக்குங்க தேவ்.

x