பகத்பாரதி
readers@kamadenu.in
‘ராஜாராணி’ சீரியலில் எதிர்மறை நாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்ரீதேவி. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருக்கும் தேவி, அவ்வப்போது வெளியிடும் ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘நிலா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவியைப் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தேன். அவரது பேட்டி:
அடிக்கடி ஃபோட்டோஷூட் பண்றீங்க… என்ன ரகசியம்?
நான் சீரியல் உலகத்துக்கு வந்தப்போ எந்த ஃபோட்டோஷூட்டும் பண்ணினதில்லை. ஆரம்பத்துல இருந்தே எனக்கு நானே தான் மேக்கப் போட்டுட்டு இருக்கேன். இன்னொருத்தர் மேக்கப் போட்டு ஃபோட்டோஷூட் பண்ணினா எப்படியிருக்கும்னு தோணுச்சு. அதனால, வழக்கமான பாணியில இல்லாம ஏதாவது கான்செப்ட் வைச்சு ஃபோட்டோஷூட் பண்ணலாம்னு திட்டமிட்டேன். அது ஒவ்வொரு கான்செப்டா போய்ட்டு இருக்கு. அவ்வளவுதான்! ரவிவர்மா ஓவியம் மாதிரியான ஒரு ஃபோட்டோஷூட் பண்ணியிருந்தேன். அது ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க.