இது சமையல்காரர்களைப் பற்றி பேசும் படம்!- ‘சர்வர் சுந்தரம்’ இயக்குநர் ஆனந்த் பால்கி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“ஒரே நாள்ல சந்தானத்தோட ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகும்னு நாங்களே எதிர்பார்க்கல. ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிச்ச அப்புறம்தான் ‘டகால்டி’ படமும் அதே நாள்ல ரிலீஸ் ஆகுதுன்னு எங்களுக்குத் தெரியும். ரெண்டு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. குறிப்பா, ‘சர்வர் சுந்தரம்’ படத்துல தன்னோட வழக்கமான காமெடியைத் தாண்டி அழுத்தமான நடிப்பையும் கொடுத்திருக்கார் சந்தானம். படம் நிச்சயம் ஹிட் ஆகும்” நம்பிக்கை மிளிர ஆரம்பிக்கிறார் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கி.

 நாகேஷ் நடிச்ச ‘சர்வர் சுந்தரம்’ படம் ஒரு கல்ட் கிளாசிக். அதே டைட்டிலைப் பயன்படுத்தி படம் எடுக்கும்போது கூடுதல் மெனக்கிடல் தேவைப்பட்டிருக்குமே?

இந்த டைட்டிலைத்தான் வைக்கப் போறேன்னு அறிவிச்சவுடனே நாகேஷ் ரசிகர்கள்கிட்ட இருந்து செல்லமான எச்சரிக்கைகள் வந்தன. நாகேஷ் சாரோட பெயரைக் கெடுக்கும் விதமா எதுவும் நடந்திடக்கூடாதுன்னு நினைச்சேன். கதை எழுத ஆரம்பிச்சது முதல் படப்பிடிப்பு முடியும் வரை ரொம்பக் கவனமா இருந்தேன். என்னைவிட சந்தானம் இன்னும் கவனமா இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் யோசிச்சுதான் எடுத்தோம். டைட்டிலுக்கான உரிமையைக் கேட்டு ஏவிஎம் நிறுவனத்திடம் விண்ணப்பிச்சப்போ அவங்க முழுக் கதையையும் கேட்டுட்டுதான் சம்மதிச்சாங்க. வணிக அம்சங்களையெல்லாம் தாண்டி சமூகத்துக்கான முக்கியக் கருத்து இந்தப் படத்துல இருக்கு. அதுதான் இந்தப் படத்தின் பெரும்பலம்.

x