கோடம்பாக்கம் என் கனவு தேசம்- `சாக்லேட்' ஹீரோ ராகுல் ரவி


பகத்பாரதி
readers@kamadenu.in

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ நெடுந்தொடரின் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர், மலையாளக் கரையோரத்தின் ராகுல் ரவி. அந்த சீரியல் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டதால், ‘ராகுல் வீ மிஸ் யூ’ என்று பலரும் சமூக வலைதளங்களில் அவரைத் தேடினார்கள். இந்நிலையில், தனது தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக 'சாக்லேட்' சீரியலின் மூலம் மறுபடியும் தலைகாட்டுகிறார் ராகுல். ‘காமதேனு’ இதழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

‘நந்தினி’ சீரியலுக்கு அப்புறம் தமிழ் சீரியல்ல உங்களைப் பார்க்க முடியலையே?

‘நந்தினி’ சீரியல் முடிவடைஞ்ச மூணாவது நாளே ‘சாக்லேட்’ சீரியல் வாய்ப்புக் கிடைச்சது. இந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்த தால உடனே ஓகே சொல்லிட்டேன். 'சாக்லேட்' சீரியலைப் பொறுத்தவரை தமிழ், மலையாளம் இரண்டிலும் ஒளி
பரப்பாகுது. அதனால முதல்ல மலையாள ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ மலையாளத்துல ‘சாக்லேட்’ சீரியல் 
ரொம்பவே ஹிட் ஆகிடுச்சு. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறமா இப்போ தமிழ்ல ஆரம்பமாகி இருக்கு. இடைவெளிக்கு காரணம் இதுதான்!

x