என்னுடைய சினிமா அப்பாக்கள்!-  ‘தர்பார்’ நிவேதா தாமஸ்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘தர்பார்’ ரிலீஸ் குஷியில் இருக்கிறார் நிவேதா தாமஸ்.  “ஹீரோயினா நடிச்சிருந்தா கூட ரஜினி கூட ஃபைட் சீன்ல ஆடி இருக்க 
முடியுமானு தெரியல... பட், பொண்ணு கேரக்டர்ல நடிச்சதுனால அது சாத்தியமாகியிருக்கு. இந்தப் படத்துல நான் ரொம்ப ரசிச்சு நடிச்ச காட்சி அதுதான்” என்று உற்சாகமாக ஆரம்பிக்கிறார் நிவேதா தாமஸ்.

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளா  நடிச்சாச்சு, இப்போ ரஜினிக்கு மகளா நடிச்சிருக்கீங்க. இப்படியே மகள் கேரக்டர் பண்ணிக்கிட்டே இருந்தா எப்போதான் ஹீரோயின் கேரக்டர் பண்றது?

‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுக்கு பொண்ணா நடிச்சி இருக்கேனே..! அத விட்டுட்டீங்க..? எனக்கு சினிமாவில் மொத்தம் மூன்று அப்பா...மூன்று பேரும் இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். எனக்கு இது மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பதில் எந்த வருத்தமும் இல்லை. ஹீரோயின் என்ற அந்தஸ்தை விட நடிகை என்ற பொறுப்பு பெருசுனு நான் நினைக்கிறேன். மலையாளம், தெலுங்கில் ஹீரோயினாவும் சில படங்கள் பண்ணிட்டு இருக்கேன். தமிழில் எனக்குப் பிடிச்ச ரோல் அமைஞ்சா மட்டும்தான் பண்றேன். எனக்கு எந்த அவசரமும் இல்லை. எனக்கான கதைகள் என்னைத் தேடி வரும். ‘தர்பார்’ அதை உறுதிப்படுத்தும்.

x