தர்பார்-திரை விமர்சனம்


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் மும்பையைச் சுத்தப்படுத்த ஒரு காவல் ஆணையர் வந்தால், அவர் ஆபத்துகளைச் சந்தித்தால், அதனால் துவண்டு விழுபவர் பின் மீண்டு எழுந்து திருப்பி அடித்தால் அதுவே ‘தர்பார்'.

முழுக்க முழுக்க ரஜினியை மனதில் வைத்து மாஸ் மசாலா பாணியில் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியிருப்பது நன்றாகத் தெரிகிறது.  ரவுடிகளை வதம் செய்யும் போலீஸ், ரவுடியின் வாரிசைக் கொல்வதும், பதிலுக்கு ரவுடி, போலீஸின் குடும்பத்தைத் தீர்த்துக்கட்டுவதும் தமிழ் சினிமா பார்த்து பழகிய பழங்கதைதான். அந்த ஒன்லைன் ஸ்டோரியில் ரஜினிக்கே உரிய மாஸ் காட்சிகளைச் சேர்த்துள்ளார்  ஏ.ஆர்.முருகதாஸ்.

காக்கிச் சட்டையில் கலர்ஃபுல் ரஜினியைக் காட்ட ஏ.ஆர்.முருகதாஸ் ரொம்பவே மெனக்கிடல் செய்துள்ளார். ஒரே நேர்க்கோட்டுக் கதை என்பதால் எந்தக் குழப்பமும் இல்லை. சுவாரசியமான நகைச்சுவைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என்று படத்தைத் தாங்கிப் பிடித்து நிமிர வைக்கிறார்.

x