பிட்லீ
வெளிநாட்டு இசைக்கலைஞர்களை வைத்து இசையமைப்பது அனிருத்தின் ஸ்டைல். இதற்கு தமிழக இசையமைப்பாளர் சங்கத்
திலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் உள்ளூர் இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இப்போது அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
இதுல அரசாங்கம் தலையிட முடியாதுன்னு அமைச்சரே சொல்லிட்டாரே?
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கசிந்துவிட்டன. டென்ஷனான லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட யாரும் படப்பிடிப்புத் தளத்தில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறாராம்.
அடுத்து படத்தோட சிங்கிள் டிராக்கும் லீக்காகுமே?
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அண்மையில், தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டாராம்.
ஆக... படம் இந்திக்கும் போகணுமா இல்லியா?