பகத்பாரதி
readers@kamadenu.in
சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் ‘காளிதாஸ்’ திரைப்படம், நடிகர் பரத்துக்கு மட்டும் மறுவரவு அல்ல, நடிப்பைவிட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்த அம்மு ராமச்சந்திரனுக்கும்தான். சின்னத்திரை, வெள்ளித்திரை என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் அம்மு, இப்படத்தின் மூலம் தனக்கான முதல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரை, ஒரு மாலை நேரத்தில் சந்தித்தேன்.
‘காளிதாஸ்’ படத்துல கலக்கிட்டீங்களே… இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க?
என்னைப் பார்க்கிற பலரும் கேட்கிற கேள்விதான் இது. கொஞ்ச காலம் சீரியல்ல நடிக்காம இருந்ததால பலரும் நான் கலைத் துறையில இல்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க. நான் தொடர்ந்து சில படங்கள், விளம்பரப் படங்கள்னு நடிச்சிட்டுதான் இருந்தேன். அதுக்கு இடையில சைக்காலஜி படிச்சேன். பெருசா கவனிக்கிற மாதிரி எதுவும் பண்ணலைங்கிறதாலதான் இப்படி ஒரு கேள்வியை என்கிட்ட கேட்பாங்க. அவங்களுக்குப் புன்னகையைப் பதிலாக்கிட்டு கடந்திடுவேன்.