இது சிபிராஜுக்காகவே எழுதிய கதை!- ‘வால்டர்’ இயக்குநர் அன்பு


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“நேத்திக்குத்தான் டீஸர் வெளியிட்டோம், இன்னைக்கு யூ-டியூப்ல நம்பர் ஒன் ட்ரெண்டிங் அதுதான். நாங்களே எதிர்பார்க்காத ஆதரவை ரசிகர்கள் கொடுத்திருக் காங்க. இந்த ஆதரவுதான் எங்களுக்கு எனர்ஜி டானிக்” சந்தோஷத்தில் படபடக் கிறார் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் அன்பு.

முதலில் விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாற்றங்களைப் படம் சந்தித்திருக்கிறது. பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதியில் சிபிராஜ், நட்ராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாக விருக்கிறது. அத்தனை சவால்களையும் கடந்து சாதித்திருக்கும் திருப்தியுடன் பேசுகிறார் அன்பு.

முதல் படத்திலேயே இவ்வளவு சர்ச்சைகளா?

x