சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி நான்காவது முறையாக இணைகிறது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சி.கே.வுக்காக அடுத்த ஸ்கிரிப்ட்டை பாண்டிராஜ் உருவாக்கிவிட்டாராம். இதுவும் குடும்ப சப்ஜெக்ட் தான் என்கிறார்கள்.
நாலு வீடு... நாற்பது நடிகர்கள்...
ஆஸ்திரேலியாவில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்து ராட்சத மீன்களுடன் புத்தாண்டைப் புதுவித
மாகக் கொண்டாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஸ்கூபா டைவிங்கை முறைப்படி கற்று சான்றிதழ் வாங்கியுள்ளாராம் அம்மணி.
தண்ணியில் மிதந்த ஆண்ட்ரியான்னு ‘கிசு கிசு' எழுதுவாய்ங்களே..!
சல்மான்கான் நடித்த ‘தபாங்க் -3’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரிலீஸானது. தமிழ்நாட்டில் இதன் பப்ளிசிட்டிக்காகவே பல கோடி செலவானது. ஆனால், வசூலோ சில லட்சங்கள் தான். அப்செட்டான சல்மான்கான் இனிமேல் இந்தியில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
வந்தாரை வாழ வைக்கும் பூமிங்கிறது நடிகைகளுக்கு மட்டும்தான் பொருந்துமோ...
கிடப்பில் போடப்பட்டிருந்த சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இம்மாதம் தொடங்கவுள்ளதாம். சிம்புவுக்கு வில்லனாக நடிக்கத் தெலுங்குப் பட நடிகர் சுதீப்பை படக்குழு அணுகியுள்ளது. சுதீப் மறுத்துவிட்ட, அரவிந்த்சாமியிடம் பேசுகிறார்கள் படக்குழுவினர்.
நாயகி யாருங்கோ?