எல்லாப் புகழும் எழுத்தாளர்களுக்கே!- இயக்குநர் எழிலின் வெற்றி ரகசியம்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் திரும்பிப் பார்க்கவைத்தவர் இயக்குநர் எஸ்.எழில். பிரபுதேவா நடித்த ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, அஜித் நடித்த, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ஜெயம் ரவி நடிப்பில் ‘தீபாவளி’ என்று இயங்கிக்கொண்டிருந்தவர், ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படங்கள் மூலம் வெவ்வேறு ‘ஜானர்’களில் பயணித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டான பேய் கதைக் களத்தைத் தொட்டிருக்கும் எழில், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மூலம் ரசிகர்களை அலறவிட வருகிறார். அவருடன் ஒரு பேட்டி:

உங்களோட சினிமா பயணத்துல இது இருபதாவது வருஷம். இதுதான் முதல் பேய்ப் படம். ஏன் பேய் பக்கம் வர இத்தனை தாமதம்?

என்னுடைய நண்பர் எழுத்தாளர் முருகன் என்கிட்ட ஒரு கதையின் ஒன்லைன் சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னோட சினிமா நண்பர்கள்கிட்ட பேசும்போது இப்படி ஒரு ஒன்லைன் இருக்குன்னு சொன்னேன். அது எப்படியோ தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை காதுக்குப் போயிருக்கு. அவர் என்னைக் கூப்பிட்டு, “உங்ககிட்ட ஒரு பேய் படத்துக்கான ஒன்லைன் இருக்காமே… அதை வச்சு படம் பண்ணலாமா?"னு கேட்டார். அப்படித்தான் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உருவாச்சு.

x