சினிமா பிட்ஸ்


தமிழ் வெப் சீரீஸில் புதுவரவாக நுழைந்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. தனது நீண்டநாள் கனவான ‘குற்றப் பரம்பரை’ கதையை வெப் சீரீஸ் வடிவில் இயக்கவுள்ளாராம். இதை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறாராம்.
அப்போ... சிம்புவின் ‘மாநாடு’ படத்தை எப்ப முடிக்கிறது?

‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்கிறார். அரசியல் களத்தில் பிசியாக இருக்கும் பவன் கல்யாண் இத்திரைப்படத்தில் நடிக்க 13 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். அதற்கே 21 ‘சி’ சம்பளமாம்.  பதிமூன்று நாள் கால்ஷீட்டுக்கு இவ்வளவு பெரிய தொகையா என்று தெலுங்கு திரையுலகமே அசந்து கிடக்கிறதாம்.
பவர் ஸ்டார்னா ச்சும்மாவா?

இந்தி பட வாய்ப்பு வந்ததும், ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்திருந்த ‘அக்னிச் சிறகுகள்’ படத் தயாரிப்பாளருக்கு கல்தா கொடுத்துவிட்டாராம் ஷாலினி பாண்டே. கடுப்பான தயாரிப்பாளர், நீதிமன்றத்துக்குப் போய்விட்டார். ஆனாலும், பாண்டே தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸாம்.
படத்துல, அக் ஷரா ஹாசன் இருக்கிறாங்கல்ல..?

மீண்டும் தமிழ் சினிமாவில் முழுமூச்சில் இறங்க முடிவெடுத்துள்ளாராம் சினேகா. 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு, கன்னடப் பக்கம் போய்விட்டவர், தற்போது ‘பட்டாஸ்’, ‘வான்’ படங்களின் மூலம் ரீ-என்ட்ரீ கொடுக்கிறார்.
பிரசன்னா சாருக்கும் வாய்ப்பு வாங்கிக்கொடுங்க மேம்...

x