சீசரும் பாஸ்தாவும் எங்களின் செல்லப் பிள்ளைகள்!- உருகும் வனிதா ஹரிஹரன்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களுள் ஒன்று, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. 500 எபிசோடுகளைக் கடந்து ஆரவாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தத் தொடரில் மிர்ச்சி செந்திலின் தங்கையாக நடிக்கும் வனிதா ஹரிஹரன், தனது இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். இந்தத் தொடரின் பரபரப்பான திருமண மண்டபக் காட்சியில், மணப்பெண் கோலத்தில் இயல்பாய் நடித்துக்கொண்டிருந்தவர், இடைவெளி கிடைத்ததும் என்னிடம் பேசினார்.

எப்படி வந்தீங்க சின்னத் திரை உலகத்துக்கு?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கல்லூரியில படிச்சிட்டு இருக்கும்போது நிறைய குறும்படங்கள்ல நடிச்சேன். 
அதன் மூலமா ‘வணக்கம் சென்னை’ படத்துல நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான `தெய்வமகள்' சீரியல்ல நடிச்சேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்ததும் பரபரன்னு பிசியாகிட்டேன்!

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் அனுபவம்..?

x