தமிழ் சூப்பர் ஹீரோக்கள் ஏன் தடுமாறுகிறார்கள்?


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘சூப்பர் ஹீரோ’ - இந்த வார்த்தையால் ஈர்க்கப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக, உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹீரோக்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஒப்புமையற்றது. உலக அளவில் இதுவரை அதிகம் வசூல் செய்த 50 படங்களின் பட்டியலில் 14 படங்கள் சூப்பர் ஹீரோ படங்கள்தான் என்பதே இதற்கு சாட்சி. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துக்கு நம்மூர் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை படையெடுத்ததைப் பார்த்தோம். அந்தப் படம் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேலாக வசூல் செய்து உலகிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது.

இப்படி உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ படங்களை ரசிக்க பெரும் கூட்டமே இருந்தாலும், தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றிபெறுவதில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படம் சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தப் படமாவது அந்தக் குறையைப் போக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சரி, ஏன் தமிழ் சினிமாவுக்கும் சூப்பர் ஹீரோ படங்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது? அலசுவோம்.

x