சினிமா பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லைவ் வீடியோ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு விளையாட்டாகப் பதிலளிப்பது வாடிக்கையான ஒன்று. சில நேரங்களில் அது வினையாக முடிவதும் உண்டு. ரித்திகா சிங்கிடம் “என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று ஒரு ரசிகர் கேட்க, “ஒருத்தரை அல்ல... குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்வேன். அப்படி இல்லையென்றால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” என்று பதிலளித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரித்திகா.
அட விடுங்கப்பா, தெரியாம உண்மைய உளறிட்டாங்க...
முழுநீள ஆக் ஷன் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் சாக் ஷி அகர்வால். ஜி.ஜே.சத்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் நடிப்பதற்காகச் சிலம்பம் கற்று வருகிறார் சாக் ஷி.
வூடு கட்டத் தெரியுமா அம்மணி?
இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ்ஜின் வாழ்க்கை ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் படமாக்கப்படுகிறது. இதில் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிப்பதால், உடல்மொழியை உள்வாங்கிக் கொள்வதற்காக அவருடனேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறாராம் டாப்ஸி. தனது டிரேட் மார்க்கான ‘கவர் டிரைவ் ஷாட்டை’ டாப்ஸிக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாராம் மித்தாலி.
ராஜ் ஆக நடிக்கிறது யாருங்கோ?
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ஆன்மிக தொடர் சுற்றுலா தான் கோடம்பாக்கத்தில் சமீபத்திய ஹாட் டாப்பிக். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கவிருப்பதால்தான் இந்த டூர் என்கிறார்கள் திரைத்துரையினர். அடுத்த வருடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கப் போகிறது. அதற்கு வேண்டித்தான் இந்த ஆன்மிக சுற்றுலா என்றும் சொல்கிறார்கள் சிலர்.
அதுக்குள்ள என்ன அவசரம்... த்ரிஷாவுக்கே இன்னும் ஆகலியே?