சினிமா பிட்ஸ்


பிட்லீ

2019-ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற இந்திப் படம் ‘அந்தாதூன்’ தற்போது சீனாவில் 300 கோடி ரூபாய்க்கு வசூல் ஈட்டியுள்ளதாம். ‘தங்கல்’ மற்றும் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்துக்குப் பிறகு சீனாவில் அதிகம் வசூலான படம் இதுதானாம். இதன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகிறாராம்.
ஆக, 2023ல தான் படம் வெளியாகும்னு சொல்றீங்க...

தேடிவந்து கதவைத் தட்டும் வித்தியாசமான வேடங்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நோ சொல்வதே இல்லையாம். தற்போது தெலுங்கில் நானி நடிக்கும் ‘டக் ஜெகதீஷ்’  படத்தில் நானிக்கு மைத்துனியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சாமி ஸ்கொயர் படத்துல வந்த வித்யாசமான வேடம் மாதிரியா அம்மணி?

காலில் செய்யப்பட்ட சிறு அறுவை சிகிச்சையின் காரணமாக வீட்டில் ஓய்வெடுக்கிறார் கமல். ஆனாலும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறதாம். சொன்ன தேதியில் படத்தை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் இயக்குநர் சங்கர், கமல் இல்லாத காட்சிகளையும், சில காட்சிகளுக்குக் கமல் மாதிரி டூப் போட்டும் எடுத்து வருகிறாராம்.
`ஐ', '2.0' தந்த பாடம் தானே சங்கர்ஜி?

x