இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு- திரை விமர்சனம்


இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட குண்டுக்காக, காயலாங்கடையில் லோடு ஏற்றும் லாரி டிரைவரைப் பலிகடா ஆக்க நினைத்தால் அதுவே `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

சர்வதேச அரசியல் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரை, குண்டு என்ன செய்யும் என்கிற பதற்றத்தைக் கடத்திய விதத்தில் வென்றிருக்கிறார். ஃபார்முலா சினிமாக்களுக்கு மத்தியில் புதிய களத்தில் நேர்மையையும் உண்மையையும் சொன்ன விதத்தில் ஆச்சரியப்படுத்துகிறார்.

வர்க்கப் பிரச்சினை, உழைப்புச் சுரண்டல், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவே முதலாளி நடத்தும் அவலம்,  மத்திய அமைச்சரின் சதி, ஆயுதம் விற்கும் இடைத்தரகரின் செயல்பாடு, காவல்துறையின் களங்கம், தொழிற்சாலை மேலாளரின் மனோபாவம், போராளியின் குணம், இயல்பு நிலையைத் தொலைத்து ஆவேசப்படும் தொழிலாளியின் கோபம் என்று அத்தனை விஷயங்களையும் திரைக்கதையில் அடுக்கி இருக்கும் விதம் சிறப்பு.

தினேஷுக்கு இது முக்கியமான படம். மனிதர் வேற லெவல் நடிப்பில் பின்னுகிறார். சாதிப் பிரச்சினை துரத்த, போலீஸ் விரட்ட, குண்டைப் புதைக்க இடம் தேடி அலைய, காதலி காத்திருக்க என எல்லாவிதமான பிரச்சினைகளும் ஒரே நபருக்கு நடக்க அத்தனை உணர்வுகளையும் நடிப்பில் காட்டி ஸ்கோர் செய்கிறார்.

x