க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
‘வாமனன்’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து பத்து வருடங்களாகத் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் பிசியாக இயங்கிவருபவர் ப்ரியா ஆனந்த். சமீபத்தில் ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் நடத்திய வெற்றி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விருது வாங்கிய குஷியில் இருந்தவரைப் பேட்டிக்காகச் சந்தித்தேன். சினிமாவின் போக்கு குறித்த ஆழ்ந்த அவதானிப்புடன் பேசினார். அவரது பேட்டி:
முதல்வர் கிட்ட விருது வாங்கியிருக்கீங்க… என்ன சொன்னார் முதல்வர்?
முதல்வர்கிட்ட பேசுறதுக்கெல்லாம் நேரமே கிடைக்கல. பேசணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, செக்யூரிட்டி கெடுபிடி பயங்கரமா இருந்துச்சு. இதுவரை நான் அப்படிப் பார்த்ததே இல்லை. நாம எல்லாம் செலிப்ரிட்டியே இல்லை. முதல்வர்தான் உண்மையான செலிப்ரிட்டினு தோணுச்சு. முதல்வர் ரொம்ப சாந்தமானவரா இருந்தார். ஒரு பட விழாவுக்கு நேரம் ஒதுக்கி கலந்துக்கிட்டது அவரோட பெருந்தன்மையைக் காட்டுது.