சமூகக் கருத்துள்ள படங்கள்தான் என் சொத்து!- - மனம் திறக்கும் ‘கயல்’ ஆனந்தி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஆனந்தி,  ‘கயல்’, ‘சண்டி வீரன்’,  ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ என தனது அடுத்தடுத்த படங்கள் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துவிட்டவர். தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரையின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் நாயகியான அவருடன் ஒரு பேட்டி:

‘கயல்’ படத்துக்குப் பிறகுப் பல படங்கள்ல நடிச்சிட்டீங்க. ஆனா இன்னும் ‘கயல்’ ஆனந்தினுதான் அடையாளப் படுத்தப்படுறீங்க… என்ன காரணம்?

எல்லா படங்களுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கிறேன். ‘பொறியாளன்’ வந்தப்பவே தமிழ் ரசிகர்கள் என்னைக் கவனிச்சாங்க. ஆனா, ‘கயல்’ படத்தைத்தான் எனக்கு அடையாளமா கொடுத்திருக்காங்க. அந்தப் படம் என் மனசுக்கும் ரொம்ப நெருக்கமான படம். அதனால என்னைக் ‘கயல்’ ஆனந்தினு கூப்பிடுறதுல எனக்கு சந்தோஷம்தான். அந்தப் படத்துக்குப் பிறகும் பல நல்ல கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்கேன்னுதான் நினைக்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு அப்புறம் நிறைய பேர் என்னை 'ஜோ'னு கூப்பிடுறாங்க. நான் நடிக்கிற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என்னோட ஒரு பாதி வாழ்ந்துட்டு இருக்குங்கிறது என் நம்பிக்கை.

x