சினிமா பிட்ஸ்


‘ஆடை’க்குப் பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த அமலா பால், வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் தனது, ‘அதோ அந்த பறவை போல’ படத்தை ரிலீஸ் செய்வதில் அதிக முனைப்புக் காட்டிவருகிறார். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு படம் டிசம்பரில் திரைக்கு வருவதாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எந்தப் பறவை போல வாழணும், நயன்தாரா மாதிரியா?

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்க விரதம் இருந்து வருவதாக படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூறுகிறார். அவர் இப்படிச் சொல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நியூயார்க்கில் தனது 35-வது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கேக் வெட்டி கொண்டாடினார் நயன்தாரா. “நியூயார்க் பார்ட்டியில் விரதமா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்க ப்ரோ” என்று ஆர்.ஜே.பாலாஜியைக் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
பேசாம விக்னேஷ் சிவனை 

விரதம் இருக்கச் சொல்லுங்கஜி...

x