க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
முழங்கால் புதையும் அளவுக்கு உள்ள பனியில் சிபிராஜ் ஓடிக்கொண்டிருக்கிறார். பனியிலேயே அதிரடியான சண்டை நடக்கிறது. வெண் பனியால் நிறைந்த திரையை ‘பாஸ்’ பட்டன் அழுத்தி உறைய வைத்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ‘ரங்கா’ படத்தின் இயக்குநர் வினோத் டி.எல். “படத்தோட டீஸருக்கு நல்ல வரவேற்பு. அடுத்த மாசம் ட்ரெயிலர் ரிலீஸ் பண்ணப் போறோம். அதுக்காக இப்பவே எடிட்டிங் வேலையை ஆரம்பிச்சாச்சு” என்றவரிடம் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தோம்.