கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
தன்னைத் தூக்கி வளர்த்த பெரியவர் ராமசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு என்ற தகவலைப் பார்த்ததும், ஏதோ பக்கத்து வீட்டுப் பெரியவராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், கமல் பிறக்கும் முன்பே அவர் வீட்டில் பணியாளராக இருந்தவர்; கமல் பிறந்ததும் அவரைப் பராமரித்து வளர்த்த செவிலித் தந்தை என்று கேள்விப்பட்டதும் பெரியவரைப் பேட்டி எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் துளிர்த்தது. உலக நாயகனின் குழந்தைப் பருவத்தைச் செதுக்கியவர் எனும் பெருமைக்குரிய ராமசாமியைச் சந்திக்க, பரமக்குடி அருகில் உள்ள தெளிச்சாத்த நல்லூருக்குச் சென்றேன். மக்கள் நீதி மய்யத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஜே.தேவராஜ் என்னை அழைத்துச் சென்றார்.
பெரியவர் ராமசாமிக்குத் தற்போது 82 வயது. கமல்ஹாசன் குடும்பத்தினருடனான தனது அனுபவங்களை வெகு சுவாரசியமாக சொல்லத் தொடங்குகிறார்.