திரை விமர்சனம்: ஆக்‌ஷன்


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

தன் காதலியையும், அண்ணனையும் கொலை செய்தவர்களைப் பழிவாங்கவும், தன் குடும்பத்தின் மீது விழுந்த குற்றச்சாட்டைக் களையவும்  புறப்படும் நாயகனின் கதைதான் ஆக்‌ஷன்.

அரசியலில் நேர்மையின் இலக்கணமாக வாழும் பழ.கருப்பையா முதல்வராக இருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில்  அவரது இடத்துக்கு அவரது மூத்தமகன் ராம்கியை கொண்டுவருவதாக அறிவிக்கிறார். அதற்கான அறிவிப்பு மேடையில்  குண்டுவெடித்து கூட்டணிக் கட்சியின் தலைவர் பலியாகிறார். தொடர்ந்து ராம்கியும் மறுநாளே இறந்து போகிறார். ராம்கியின் தம்பியான விஷால் தமிழகத்தில் நிகழும் இந்த அரசியல் கொலைகளின் ஆணிவேரைத்தேடி நாடு விட்டு நாடு போய் அதிரடி ஆக்‌ஷன் கிளப்புகிறார்.

x