கமல் எனும் காலச் சரித்திரம்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அறுபது ஆண்டுகள். 

கிட்டத்தட்ட ஒரு சாமானியனின் சராசரி வயது. ஆனால், கமல்ஹாசன் எனும் மாபெரும் கலைஞனைப் பொறுத்தவரை, கலைப் பயணியாக அவர் கடந்துவந்திருக்கும் காலம் அது.

இத்தனை ஆண்டுகளில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அவரது சமகாலக் கலைஞர்கள் யாருக்கும் சாத்தியமாகாத பிரத்யேகத் தன்மை கொண்டவை. ஹாலிவுட்டில் நீண்டகாலத் திரைப் பயணம் கொண்டவர்களாக மார்லன் பிராண்டோ, கிளின்ட் ஈஸ்ட்வுட் போன்ற மிகச் சில ஆளுமைகளை மட்டுமே குறிப்பிட முடியும். ஆனால், அவர்களது படைப்புப் பட்டியல் அத்தனை நீளமானது அல்ல. மாறாக, கமல் 200 படங்களைத் தாண்டி இன்னமும் இயங்கிக்கொண்டிருப்பவர்.

x