'பிக் பாஸ் சேரன்' என்றால் எனக்கு கோபம் வருகிறது!- ‘ராஜாவுக்கு செக்’ இயக்குநர் சாய் ராஜ்குமார்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“நான் ‘மழை’ படம் இயக்கும்போது இருந்ததைவிட இப்போது சினிமாவின் பரிமாணம் ரொம்பவே மாறியிருக்கிறது. கதை சொல்லும் விதம், தொழில்நுட்பம் எல்லாமே மாறியிருக்கின்றன. அந்த வகையில் ‘ராஜவுக்கு செக்’ படமும் ஒரு புதிய பரிமாணம்தான்” என நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் இயக்குநர் சாய் ராஜ்குமார். ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பிசியாக இருந்தவரைப் பேட்டிக்காகச் சந்தித்தோம்.

‘மழை’ வந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்க வந்துள்ளீர்கள். ஏன் இவ்வளவு பெரிய இடைவேளை?

‘மழை’ படத்துக்குப் பிறகு தெலுங்கில் ‘ஹெலோ பிரேமிஸ்தாரா’ எனும் படத்தை இயக்கினேன். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆகி அந்த புராஜெக்ட் எல்லாம் பாதியில் டிராப் ஆகிவிட்டன. திரைத் துறை இப்படித்தான். கொடுத்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். இல்லையென்றால் கருணையே காட்டாது.

x