க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்தச் சின்ன பட்ஜெட் படம் உலகம் முழுக்கச் சுற்றி விருதுகளை வென்றுவருகிறது. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் வசந்தத்தைத் தேடிப் பயணிக்கும் முதியவரின் கதையைச் சொல்லும் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளியிருக்கிறது. அந்தப் படத்தின் இயக்குநர் மதுமிதாவுடன் ஒரு பேட்டி:
படத்தின் கதை என்ன?
கோமா நிலையில் இருக்கும் கருப்பு துரை என்ற 80 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் ‘தலைக்கு ஊற்றல்’ முறைப்படி கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்து, நிறைய இளநீர் குடிக்கவைத்து ஜன்னி வரச்செய்து கொல்லும் கொடூரமான முறை இது.