சந்தனார்
readers@kamadenu.in
பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ படத்தின் பிரிவ்யூ காட்சி. முதல்வர் எம்ஜிஆர் வந்திருக்கிறார். படத்தின் டைட்டிலில் ‘இசை: தேவேந்திரன்’ என்று வருகிறது. எம்ஜிஆருக்கு ஆச்சரியம். அருகில் இருந்த கங்கை அமரனிடம் கேட்கிறார். அவர் பாரதிராஜாவைக் கைகாட்டுகிறார். தமிழ்த் திரையுலகையே ஆண்ட ஒரு ஜோடி இப்படிப் பிரிந்து போனது எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரை ரசிகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சிதான். அதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன – வைரமுத்துவுடனான இளையராஜாவின் பிணக்கு உட்பட!
அதன் பின்னர் மீண்டும் கூடல். பின்பு ஊடல் என்று இருந்த இளையராஜா - பாரதிராஜா ஜோடி ஒருகட்டத்தில் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டது. ஒரே ஒரு படத்திலாவது இருவரும் சேர மாட்டார்களா என்று காத்திருந்த ரசிகர்களும் சோர்ந்துவிட்டார்கள். இப்படியான சூழலில், இளையராஜாவுடன் காரில் அமர்ந்து பயணிக்கும் புகைப்படங்களை மகிழ்ச்சி பொங்க ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் பாரதிராஜா. இதையடுத்து, ஏதேனும் ‘அறிவிப்பு’ வருமா என்று ஆவல் பொங்கக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
மண்ணின் மைந்தர்கள்