பிட்லீ
‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வியாழன் வெளியானது. வெளியிடுவதற்கு முன்பு அதைப் பார்த்த ரஜினி, “தூள், கண்ணா” என்று படக்குழுவைப் பாராட்டினாராம். “இதுவரை வெளியான தனது படங்களின் மோஷன் போஸ்டர்களிலேயே அல்டிமேட் இதுதான்” என்றும் மகிழ்ந்தாராம்.
படத்துக்கு ரசிகர்கள் என்ன மார்க் போடுறாங்கன்னு பார்க்கணுமே!
டில்லியில் நடக்கும் ‘விஜய் 64’ படத்தின் படப்பிடிப்பு காற்று மாசு காரணமாகதினமும் தாமதமாகத்தான் தொடங்குகிறதாம். மாலையில் சீக்கிரமே பேக்-அப் சொல்லிவிடுகிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆனால், அந்தக் குறுகிய நேரத்திலேயே அன்றைக்கு எடுக்கவேண்டிய காட்சிகளைச் சிறப்பாக எடுத்துவிடுகிறாராம் லோகேஷ்.
அப்படியே எடுத்தாலும், `என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு'ன்னுதான் ரசிகன் சொல்லுவான்!