நம்புங்க... நான் நிஜமாவே பாக்ஸர்!- ‘ராஜா மகள்' ஐரா அகர்வால் பேட்டி


பகத்பாரதி
readers@kamadenu.in

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகியிருக்கும் ‘ராஜா மகள்’ நெடுந்தொடரின் ‘ப்ரமோ’ வெகுவாகக் கவனம் ஈர்த்தது. இந்தத் தொடரில் நாயகியாக நடிப்பவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்கிற எண்ணம் வர, யூ-டியூபில் தேடிப் பார்த்தால், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் `கண்மணி' தொடரில் நடித்த ஐரா அகர்வால். இப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறார் ஐரா அகர்வால். ‘ராஜா மகள்’ சீரியல் படப்பிடிப்பில் சீரியஸாக நடித்துக் கொண்டிருந்த அவரிடம் ஒரு பேட்டி.

 ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க வந்துட்டீங்களாமே ?

நான் நிறைய குறும்படங்கள், விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். என்னுடைய ஃப்ரெண்ட் ஒருத்தங்க ‘கண்மணி’ சீரியல்ல நடிக்கிறதுக்காக ஆடிஷனுக்குப் போனாங்க. பேச்சுத் துணைக்காக என்னையும் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே என்னைப் பார்த்த ‘கண்மணி’ டீம், “நீங்க நடிப்பீங்களா?”ன்னு கேட்டாங்க. சரின்னு நடிச்சிக் காட்டினேன். என் நடிப்பு அவங்களுக்குப் பிடிச்சிருந்தது போல… உடனே என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. என்கூட வந்த ஃப்ரெண்டை செலக்ட் பண்ணலை.

x