க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
குறும்படங்களில் முகம் காட்டத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என்று தன் நடிப்பின் எல்லைகளை விசாலப்படுத்திக்கொண்டிருப்பவர் காளி வெங்கட். திரைத் துறையில் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் திறமையான கலைஞர்.
பிரசாத் லேப் வாசலில், பல திரை ஆளுமைகளின் வளர்ச்சியைச் சலனமற்று கவனித்துக் கொண்டிருக்கும் ஆலமரத்தின் நிழலில் அவருடன் ஒரு பேட்டி:
எப்படி ஆரம்பித்தது இந்த சினிமா பயணம்?