க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
“இந்த வாழ்க்கையே ஒரு பெரிய ‘ட்ரிப்’ தான். நம்மளோட நீண்ட பயணத்துல ஒவ்வொரு திருப்பத்துலயும் ஒரு ஆச்சரியம் காத்துட்டு இருக்கும். அந்தத் திருப்பங்கள் சில சமயம் ஆபத்தையும் கொடுக்கும். அப்படி ஒரு ஆபத்தைப் பத்திப் பேசுற படம்தான் இது” - களைப்புறாத பயணி போல் உற்சாகமாகப் பேசுகிறார், ‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
ஆந்திர மாநிலம் தலைக்கோணம் காடுகளில் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கும் இந்தப் புதுமுக இயக்குநருடன் ஒரு பேட்டி:
சினிமாவுக்கு உங்களைக் கூட்டிவந்த ‘ட்ரிப்’ எது?