சினிமா பிட்ஸ்


த்ரிஷா நடித்த முடித்த சில படங்கள் சில பல சிக்கல்களால் திரைக்கு வராமல் முடங்கிக்கிடக்கின்றன. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த த்ரிஷா, தானே களத்தில் இறங்கிவிட்டார். சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி படத்தை நாமே வெளிக்கொண்டு வந்துவிடுவோம் என்று தயாரிப்பாளர்களிடம் உறுதியளித்துள்ளாராம் த்ரிஷா.
ஒரு நடிகையின் `விஷன் 2020'

`ஆகா கல்யாணம்' வெப் சீரிஸில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ப்ரிகிதாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதைக் கவனித்த லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்துத் தான் இயக்கும் படத்தில் நடிக்க ப்ரிகிதாவிடம் அறுபது நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளாராம். ஜீ.வி.பிரகாஷின் அடுத்த படத்திலும் அம்மணி தான் ஹீரோயினாம்.
வெல்கம் டு கோலிவுட்

தீபாவளிக்கு ‘பிகில்' படத்துக்குப் போட்டியாகக் ‘கைதி’ படத்தை வெளியிட்டது போல் வருகிற பொங்கலுக்கு ‘தர்பார்’ படத்துக்குப் போட்டியாக ‘சுல்தான்’ படத்தை வெளியிடலாம் என்று படக்குழுவிடம் சொல்லியுள்ளாராம் கார்த்தி. ‘கைதி’ படத்தின் வெற்றிதான் இந்த தன்னம்பிக்கைக்குக் காரணமாம்.
விஜயை பிடிக்காதவங்க `கைதி'க்கு வந்த மாதிரியே..!?

‘தர்பார்’ படத்தில் கமிட் ஆன உடனேயே முருகதாஸுக்குக் கோலிவுட்டில் ஏகப்பட்ட கிராக்கி. அதனால், சூர்யா, விக்ரம் இருவரும் விடுத்த அழைப்பை நாசூக்காக மறுத்த முருகதாஸ், அடுத்ததாக அஜித்துடன் படம் பண்ணப் போகிறாராம்.
யுவன் ஷங்கர் ராஜாவையும் கூப்பிடுங்க சாரே...

x