கைதி- திரை விமர்சனம்


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

காவல்துறை அதிகாரியான பிஜாய் (நரேன்) தனது குழுவினருடன் சேர்ந்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்தைக் கைப்பற்றுகிறார். அதை கடத்திச் சென்ற சிலரை கமிஷனர் அலுவலகத்தில் சிறைவைக்கிறார். போதை மருந்தை மீட்கவும் சிக்கியவர்களை விடுவிக்கவும் காவல்துறை அதிகாரிகளை பழி தீர்க்கவும் போதை மருந்து மாஃபியாவின் அடியாட்கள் களத்தில் இறங்குகிறார்கள்.

அதற்காக, காவல்துறையின் கறுப்பாடு மூலம் காவல்துறையினர் பலரை மயக்கமுறச் செய்கின்றனர். இதனால் தனித்துவிடப்படும் பிஜாய், தன் மகளைப் பார்ப்பதற்காக சிறையிலிருந்து வெளியேறியிருக்கும் ஆயுள்தண்டனைக் கைதி டெல்லியின் (கார்த்தி) உதவியை நாடுகிறார். கார்த்தி மயக்கமுற்ற காவலர்கள் அனைவரையும் லாரியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

போதை மருந்து கும்பல் காவலர்களைப் பழிவாங்க லாரியைத் துரத்துகிறது. இன்னொரு குழு போதை மருந்தையும் கைது செய்யப்பட்டவர்களையும் மீட்க கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது. காவல்துறைக்கும் போதை மாஃபியாவுக்கும் இடையிலான இந்த மோதலில் வெல்வது யார்? இதில் சிக்கிய அப்பாவிகளின் கதி என்ன? டெல்லி தன் மகளை சந்தித்தானா இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.

x