சினிமா பிட்ஸ்


வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பும் `V' என்ற எழுத்தில் தான் தொடங்க வேண்டும் என்று அஜித் சொல்லிவிட்டாராம். அதன்படி படக்குழு ஒரு பெரிய பட்டியல் போட்டிருக்கிறது. அதில், 'வலிமை' என்ற தலைப்பே இறுதி செய்யப்படக்கூடும் என்கிறார்கள்.
கதையைவிட சென்ட்டிமென்ட் தான் முக்கியமா தல?

`பிகில்' படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளதால் யு/எ சான்றிதழ் அளித்திருக்கிறது சென்சார் போர்டு. ஆட்சேபகரமான வன்முறை காட்சிகளுக்கு மட்டுமில்லாமல் `டெல்லி', `கோர்ட்' போன்ற வார்த்தைகளையும் சென்சாரில் கத்தரி போட்டுவிட்டார்களாம்.
விளம்பர உதவி: தமிழக பாஜகன்னு டைட்டில் போடுங்க சார்...

பிரபுதேவா நடிக்கவுள்ள புதுப் படத்துக்கு `ஊமை விழிகள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 1986-ல், ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களால் படைக்கப்பட்ட `ஊமை விழிகள்' படம் போலவே இதுவும் ஒரு த்ரில்லர் படம்தானாம்.
 இன்னொரு `மெர்க்குரி'யாய் மின்னட்டும்...

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியான நமீதா, குண்டக்க மண்டக்க எடை போட்டதால் வாய்ப்பிழந்து போனார். இப்போது தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நமீ. திரையில் இன்னொரு ரவுண்ட் வர வேண்டும் என்பது அம்மணியின் கனவாம்.
 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...

x